தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ,பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஆகஸ்ட் 27) மதுரை விமான நிலையத்துக்கு வந்தார்,
அப்போது அவரிடம் அதிமுக மாநாடு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, புளியோதரை எப்படி இருந்ததோ… அதே போன்றுதான் மாநாடும் இருந்தது என கிண்டலாக பதில் சொன்னார்.
நீங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, சஸ்பென்ஸ்… பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.
அதிமுகவிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட பிறகு டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அதிமுகவிலிருந்து ஓபிஎஸை நீக்கியது செல்லும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
சோசியல் மீடியாவில் நாறடித்துவிடுவோம்: ஜெயக்குமார் எச்சரிக்கை!
வீராங்கனைக்கு உதட்டில் முத்தம்: பிஃபா அதிரடி நடவடிக்கை!