கோயில்கள் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறக்கூடிய பேராபத்து ஏற்படலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை விசிக நிர்வாகி இளையராஜா வீடியோ எடுத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனத்துக்கு உள்ளானது.
சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்… நடவடிக்கை எடுக்கத் தயங்கியதா போலீஸ்?
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, “சிதம்பரம் கோயிலில் கிரிக்கெட் விளையாடினால் என்ன தப்பு? அவர்கள் என்ன கர்ப்ப கிரகத்திலா விளையாடினார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 10) தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸிடம் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடுவதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது தவறானது. அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியுமா?
தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனி மைதானத்தை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தீட்சிதர்கள் மட்டுமே இங்கு விளையாட முடியும் என்று விளம்பர பலகையை வைக்கலாம்.
ஆக பல கோயில்களில் இந்த விளையாட்டு நடைபெற வாய்ப்பு உண்டு. கோயில்கள் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறக்கூடிய பேராபத்தும் ஏற்படலாம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரத்தன் டாடா மறைவு: டவர் ஆஃப் சைலன்ஸ்… பார்சிக்களின் வித்தியாசமான இறுதிச்சடங்கு!
ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால்…இறுதி போட்டி எது?