போக்குவரத்துத் துறையில் ஆட்சேர்ப்பு முறைகேடு புகார் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது புகார் சுமத்தப்பட்டது.
விசாரணைக்கு பிறகு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதற்கிடையே சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையும் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கடந்த 1ஆம் தேதி ரத்து செய்தது.
இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அந்த மனுவை விசாரிக்கும்போது தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலை.ரா
மின்சார மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்துவோம்: அமைச்சர் செந்தில் பாலாஜி