அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று (ஆகஸ்ட் 13) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறி அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கெனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு சொந்தமான கரூரில் உள்ள வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர்.
இதுதொடர்பான விசாரணைக்காக பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை.
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய செல்போன் எண்ணை டிராக் செய்து தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் கேரளா மாநிலம் கொச்சியில் வைத்து அசோக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
அங்கிருந்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
செந்தில்பாலாஜியின் அமலாக்கத்துறை காவல் நேற்று முடிவடைந்த நிலையில் இன்று அவரது தம்பி அசோக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நாங்குநேரி சம்பவம்… உதயநிதியை கைது செய்யவேண்டும் : கிருஷ்ண சாமி