சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு போராடி வருகிறார். அவரது ஜாமீன் மனு வரும் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (நவம்பர் 15) மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறங்கிய போது அவரை ஒருவர் கைதாங்கலாக பிடித்து இறக்கிவிட்டார். பின்னர் வீல் சேரில் அமர்ந்த அவரை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றனர்.
அங்கு எக்கோ மற்றும் இதயம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி தனக்கு கழுத்து வலி இருப்பதாக கூறியதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை அவசியம் என்று மருத்துவர் பரிந்துரைத்திருக்கிறார். இதனால் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சங்கரய்யாவின் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் அஞ்சலி!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!