ஜூன் 28 ஆஜர்படுத்தப்படுகிறாரா செந்தில் பாலாஜி?

அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கவில்லை என்பதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை இன்று (ஜூன் 23) ஆஜர்படுத்தவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் 14ஆம் தேதி உத்தரவிட்டது.

ஜூன் 23 வரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என கடந்த ஜூன் 16ஆம் தேதி உத்தரவிட்டது. ஜூன் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று கூறியது.

ஆனால் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் ஜூன் 21ஆம் தேதி பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவ காரணங்களால் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையால் காவலில் எடுக்க முடியவில்லை.

இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகிய காரணங்களால் அவரிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில், உடல்நிலை மோசமாகவும், மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என ஏற்கனவே அமலாக்கத்துறை தரப்பில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது.

இந்தசூழலில் இன்று செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இதனால் நீதிமன்ற காவல் முடியும் ஜூன் 28ஆம் தேதியன்று அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியா

வானதி – கனிமொழி : வேலையைவிட்ட ஓட்டுநர் ஷர்மிளா – என்ன நடந்தது?

”பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி தேர்தல்”- மம்தா ஆவேசம்!

மறக்கமுடியாத சாம்பியன்ஸ் டிராபி: வரலாற்றில் நிலைபெற்ற தோனியின் கேப்டன்ஷிப்!

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த இளம் வீரர்கள்!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0