அமைச்சர் செந்தில் பாலாஜியை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்.
இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதிகள் ஏஸ் போபண்ணா, எம்எம் சுந்தரேஷ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அதன்படி “செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும். அவரை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
செல்வம்
மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி
கலைஞர் நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!