செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு ஜாமீன்: உயர்நீதிமன்ற கிளை புது உத்தரவு!

அரசியல்

செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (செப்டம்பர் 11) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

கடந்த ஜூன் மாதம் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றபோது திமுக ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அதிகாரிகள் வந்த காரின் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் சில தினங்களிலேயே கரூர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 19 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 15 பேரின் ஜாமீனை ரத்து செய்தது. ஆனால் மீதமிருக்கும் 4 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்படாமல் இருந்தது. அந்த 4 பேரின் ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுநீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் நோட்டீஸை பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

மோனிஷா

’மறக்குமா நெஞ்சம்’: சிக்கிய சி.எம். கான்வாய்…தாம்பரம் போலீஸ் நடவடிக்கை!

தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *