senthil balaji supporters bail denied

செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஜாமீன் ரத்து!

அரசியல்

கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கில், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் நான்கு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜனவரி 2) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. senthil balaji supporters bail denied

கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, அவர்களது வாகனங்களை செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்.

மேலும், சோதனைக்கு வந்த ஐடி அதிகாரிகளின் உடைமைகளை சோதனை  செய்தனர். ஐடி அதிகாரிகள் கார்களை தாக்கிய செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் எஸ்.பி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 19 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 19 பேரும் ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கரூர் நீதிமன்றம் 19 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஜாமீன் வழங்கியதை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 15 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்து, 4 பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

4 பேர் ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமான வரித்துறை தரப்பில், “மத்திய அரசின் கருத்துக்களை கேட்காமல் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு ஜாமீன் வழங்கியது மோசமான முன் உதாரணமாகும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதி தண்டபாணி, “வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளாமல் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு இயந்திரத்தனமாக கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

எனவே செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் சசிகுமார், ரீகன், ராஜன், சரவணன் ஆகிய நான்கு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுகவின் நீட் கையெழுத்து இயக்கம் : உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

“ப்ளீஸ் அதை திருப்பி கொடுத்துவிடு”: முகம் தெரியாத திருடனிடம் கெஞ்சும் வார்னர்

முனி, அரண்மனை வரிசையில் பீட்சா 4

senthil balaji supporters bail denied

+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *