செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர்நீதிமன்றத்தை அணுக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
உயர்நீதிமன்ற உத்தரவின்றி செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என்று சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார்.
இந்தநிலையில் எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் மீதான சிறப்பு நீதிமன்றமே செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்கும் என்று நீதிபதி அல்லி இன்று உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணி ஆகியோர் ஜாமீன் கோரி முறையிட்டனர்.
அப்போது நீதிபதி ரவி, “இந்த வழக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வருவதால் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. உயர்நீதிமன்றம் ஒருவேளை ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே தன்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!
’அலங்கு’ ஃபர்ஸ்ட் லுக்: சொல்ல வருவது என்ன?