senthil balaji shifted to kaveri

செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!

அரசியல்

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று (ஜூன் 15) விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரதசக்கரவர்த்தி, நிஷா பானு ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருக்கின்றன. பை பாஸ் சிகிச்சையை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

ஆனால் அமலாக்கத்துறை சார்பில், “செந்தில் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவையா என்பதை எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்” என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றவும் அமலாக்கத்துறையின் மருத்துவ குழு செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு இன்று இரவு 9.15 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பின்னர் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

மோனிஷா

எய்ம்ஸுக்கு 2வது செங்கல்லே இல்லை: முதல்வர் ஸ்டாலின்

மோடியிடம் இருந்து தப்பிக்க முடியாது: ஸ்டாலினுக்கு வானதி எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *