டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதல் கட்டணமா? நிருபர்களுடன் செந்தில் பாலாஜி வாக்குவாதம்!

அரசியல்

டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக 1977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கிருஷ்ணசாமி போன்றவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் சீட் வாங்க வேண்டும் என்பதற்காக அரசின் மீது குற்றம்சாட்டுகிறார்கள்.

டாஸ்மாக் நிறுவனத்தை பொறுத்தவரை எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் மதுவிற்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, “எந்த கடையில் இதுபோன்ற தவறுகள் நடந்தாலும் அந்த கடை எண்ணை குறிப்பிட்டு புகார் சொன்னால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை மதுபானத்திற்கு கூடுதல் ரூபாய் வசூலித்தாக 1977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.5.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தவறு செய்யக்கூடிய சில விற்பனையாளர்களை காப்பாற்ற மேற்பார்வையாளர்களை சில தொழிற்சங்கங்கள் தூண்டி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து சிலர் இறந்துள்ள விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடந்துள்ளது. முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளார். அதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தி மீதமுள்ள விசாரணையை விரைந்து நடத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

செல்வம்

திருமண தேதியை அறிவித்த சர்வானந்த் குடும்பத்தினர்!

மின்வெட்டு மின்தடை: செந்தில் பாலாஜி விளக்கம்!

+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதல் கட்டணமா? நிருபர்களுடன் செந்தில் பாலாஜி வாக்குவாதம்!

  1. ஒரே ஆணின் உறவுக்கு பிறந்தவர்கள் மட்டுமே பாட்டிலுக்கு 5,10,20 அதிகம் விற்பதை ஏற்று கொள்வார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *