கோவை பந்த் தொடர்பான அமைச்சர் செந்தில் பாலாஜியின் கேள்விக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (அக்டோபர் 29) கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது,
“கட்சி தலைமைக்கு தெரியாமல் பாஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் எப்படி முழு அடைப்பை அறிவித்தார்கள்? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓர் அரசியல் கோமாளி.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபோது தனக்கு தொடர்பில்லை என்று அண்ணாமலை கூறியிருப்பது முறையானது அல்ல.” என்று தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி பேசியதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சாராய அமைச்சருக்கு காதில் கோளாறு இருப்பதாக அறிகிறேன்.
“எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாமல் அறிவித்துவிட்டார்கள்” என்று நான் சொன்னதாக பொய்களை கட்டவிழ்த்து விடும் சாராய அமைச்சர் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்.
அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் அதற்கு தண்டனையாக குறைந்தபட்சம் 100 மதுக் கடைகளையாவது சாராய அமைச்சர் மூட வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓட வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செல்வம்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு: அமைச்சரவை ஒப்புதல்!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!