தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூன் 29) உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இவர் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்படுவார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை முத்துசாமிக்கும் பிரித்து வழங்கப்பட்டது.
இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உத்தரவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்!
ஹெலிகாப்டரில் பயணித்து மணிப்பூர் மக்களை சந்தித்த ராகுல்