தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு செந்தில்பாலாஜியின் துறைகள்: ஆளுநருக்கு பரிந்துரை!

அரசியல்

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் வகித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு ஆளுநருக்கு முதலமைச்சர் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை ஏற்று ஆளுநர் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஜூன் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்துள்ளார்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் அமைச்சரவையில் இடம் பெற முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 14) மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், செந்தில் பாலாஜியின் துறைகள் யாருக்கு? கேபினட் ரேஸ் ஸ்டார்ட் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், ‘செந்தில்பாலாஜி வசமிருந்த துறைகள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களிடமே ஒப்படைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் திருப்தி அடையாமல் இருக்கும் தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன் போன்றோரும் செந்தில் பாலாஜி வகித்த துறைகளில் இரண்டில் ஒன்றாவது தங்களுக்கு கிடைக்குமா என்று முயற்சித்து வருகிறார்கள்’ என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே… செந்தில் பாலாஜியின் வசமிருந்த மின்சாரத்துறை தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும்… மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஈரோடு முத்துசாமிக்கும் பகிர்ந்தளிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்திருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வம்

ஆளுநர் தலையிட வேண்டும்: அதிமுக கோரிக்கை!

ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *