வரும் ஜூன் 28 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். வரும் ஜூன் 28 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமலாக்கத் துறையின் வழக்கில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை தொடங்கி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதாடி வருகிறார்.
பிரியா
டிஎன்பிஎல் கிரிக்கெட்… ஒரே பந்தில் 18 ரன்கள் வழங்கிய சேலம் வள்ளல்!
செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்!