senthil balaji madras session court

வழக்கு ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி மனுத்தாக்கல்!

அரசியல்

அமலாக்கத்துறையிடம் குற்றப்பத்திரிகை, கைது குறிப்பாணை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 14) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர். ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் அமலாக்கத்துறை கஸ்டடி நாட்கள் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 3000 பக்க குற்ற ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்தநிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் குற்றப்பத்திரிகை, கைது குறிப்பாணை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையிடமிருந்து குற்ற ஆவணங்களை பெற்ற பின்னர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

நீட் தேர்வால என்ன சாதிக்க போறீங்க? – ஜெகதீஸ்வரனின் நண்பர் பேட்டி!

நீட் தோல்வி: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *