ஐசியுவில் செந்தில் பாலாஜி : மருத்துவமனைக்கு கே.என்.நேரு வருகை!
அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே பன்னீர் செல்வமும் வந்துள்ளனர்.
அமலாக்க துறை விசாரணையைத் தொடர்ந்து நெஞ்சு வலி காரணமாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் 6ஆவது மாடியில் உள்ள ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி, சேகர்பாபு மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வந்தனர்.
இந்நிலையில் தற்போது திமுக முதன்மை செயலாளரும் மூத்த அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகைத் தந்துள்ளனர்.
அவர்கள் உள்ளே சென்று செந்தில் பாலாஜி எப்படி இருக்கிறார் என மருத்துவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
மறுபக்கம் முதல்வர் ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரியா
ஐசியு-வில் செந்தில் பாலாஜி: கைதா, கஸ்டடியா?