கோவையில் அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த தடைகளை உடைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள ஆய்விற்காக கோவை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 6) அனுப்பர்பாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ”கோவையில் அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த Comeback கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவருடைய சிறப்பான, வேகமான செயல்பாடுகளை பார்த்து நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். அதற்குள் நான் விரிவாக போக விரும்பவில்லை. ஏன் என்றால் இது அரசு நிகழ்ச்சி.
ஆனால் தடைகளை எல்லாம் உடைத்து மீண்டும் அவர் வந்திருக்கிறார். தொடர்ந்து கோவைக்காக சிறப்பாக செந்தில் பாலாஜி செயல்படுவார். இது உறுதி” என்றார்.
பெரியார் பெயரில் நூலகம்!
மேலும் அவர், “சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்திற்கு அவர்கள் இருவரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயர் வைக்கப்படும். இந்த நூலகம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும்” என்று ஸ்டாலின் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
US Election : வெற்றியை தீர்மானிக்கும் அந்த 7 மாகாணங்கள்… யார் முன்னிலை?
ஐபிஎல் மெகா ஏலம் : ஜெட்டா நகரை தேர்வு செய்த பிசிசிஐ… காரணம் என்ன?