30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல்… அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு!

அரசியல்

30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார வாரிய தலைமையகத்தில் இன்று (நவம்பர் 8) ஆய்வு செய்தார்.

பருவமழைக்காலம் மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

அப்போது, 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும் அதற்கான காரணத்தை அந்தந்த அலுவலர்களிடம் கேட்டறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “இதுபோன்று தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். பொதுமக்களிடமிருந்து சமூக வலைதளங்கள் வாயிலாக பெறப்படும் புகார்கள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

மேலும், வட்ட அளவில் அதிக அளவு மின் தடைகள், மின்மாற்றிகள் பழுது மற்றும் புகார்களுக்கு மேற்பார்வைப் பொறியாளர்கள் தமது பணிகளில் தனிக்கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகள் ஆகியவற்றில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தனிக்கவனம் செலுத்தி மின்நுகர்வோரிடமிருந்து வரும் புகார்களை குறைப்பதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஆவணப் படம் : ட்ரெய்லர் நாளை வெளியீடு!

உதவிக்கு ஓடோடி வருபவர் நெப்போலியன் : குஷ்பு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *