செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 17ஆவது முறையாக நீட்டித்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்ச, உயர் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மூன்று முறை தள்ளுபடி செய்தது. இதனால் அவர் 7 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16 வது முறையாக நீட்டிக்கப்பட்டது. 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த காவல் இன்றுடன் (ஜனவரி 29) முடிவடைந்ததால் புழல் சிறையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி.
அப்போது ஜனவரி 31வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 17ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பாலியல் வழக்கு: ராஜேஷ் தாஸுக்கு கெடு விதித்த விழுப்புரம் நீதிமன்றம்!
”நாதக ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் 11 பேரும் தமிழர்கள் தான்”: சீமான்