மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
அமலாக்கத் துறை விசாரணையை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று (ஜூன் 14) காலை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகைத் தந்தார்.
செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் பார்த்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அமைச்சர் கே.என்.நேரு, “செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை. சிரமத்தில் இருக்கிறார். உள்ளே சென்று ஒரு மணி நேரம் காத்திருந்தேன். தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். அதன் பிறகு பார்ப்பதற்கு அழைத்தார்கள். பின்னர் செந்தில் பாலாஜியை பார்த்து தட்டிக்கொடுத்துவிட்டு வந்தேன். அனைத்து மருத்துவர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்” என கூறினார்.
பிரியா
ஐசியுவில் செந்தில் பாலாஜி : மருத்துவமனைக்கு கே.என்.நேரு வருகை!