காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால் இதய நோய் காரணமாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து ஜூன் 15ஆம் தேதி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஜூன் 21ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு பரத சக்ரவர்த்தி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதில் நீதிபதி பரத சக்ரவர்த்தி, “இந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தீர்ப்பு வழங்கிய 10 நாட்களில் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றி சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கலாம்” என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம் என்று அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 17) காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு செந்தில் பாலாஜி 4.50 மணிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பிரியா
குட்கா வழக்கு: 11-வது முறையாக அவகாசம் கேட்ட சிபிஐ!
கார்லோஸ் அல்காரஸ்: டென்னிஸ் உலகின் புதிய சகாப்தம்!