அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் 15ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 21ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது.
அதன் பின் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜியின் உடல் சீராக இருப்பதாகக் காவேரி மருத்துவமனை தெரிவித்தது.
அறுவை சிகிச்சை செய்து இன்றோடு 4 நாட்கள் ஆகும் நிலையில் ஐசியுவில் இருந்து தனி அறைக்குச் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டுள்ளார்.
காவேரி மருத்துவமனையில் உள்ள 7ஆவது தளத்திலிருந்து 4ஆவது தளத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், அறை எண் 435ல் வைத்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியா