செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை பிடியில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை ஒரு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் இன்று (ஜூன் 15) இரு தரப்பினரும் வாதங்கள் முன்வைத்தனர். மருத்துவ காரணங்கள் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.
செந்தில் பாலாஜி காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 15 நாள் காவலில் செல்ல முடியுமா என்ற கேள்விக்கு இயலாது என்று பதிலளித்தார்.
அமலாக்கத் துறை, உண்மையை கண்டறிய காவலில் எடுத்தே ஆக வேண்டும் என்று வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த இரு மனுக்கள் மீதும் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.
பிரியா
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ விளக்கம்!