அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை கைது செய்தோம் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நேற்று செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜாராகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பிஎம்எல்ஏ சட்டத்தின் படி அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் அவரை விசாரணைக்கு உட்படுத்த முடிவதில்லை. விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் செந்தில் பாலாஜி தடுத்தார்.
இந்த விவகாரத்தில் பிஎம்எல்ஏ அதிகாரங்களை பயன்படுத்த உயர்நீதிமன்றம் கோரியது. எங்களது 15 நாட்கள் கஸ்டடி காலம் இன்னும் தொடங்கவில்லை. எதிர் தரப்பு உங்கள் முன்பாக உண்மையான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. நீங்கள் உண்மையான வாதங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். செந்தில் பாலாஜி ஒத்துழைக்காததால் தான் அவரை கைது செய்தோம். ஆனால் இன்னும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை” என்று வாதம் செய்து வருகிறார்.
செல்வம்
பேனா நினைவு சின்னம்: அமைச்சர் எ.வ.வேலு புதிய தகவல்!
காவல்துறை பாதுகாப்புடன் பட்டியலினத்தவர்கள் கோவிலில் சாமி தரிசனம்!