செந்தில் பாலாஜி வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மனுவையும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவையும் நேற்று நீதிபதி அல்லி விசாரித்தார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பிலும் , அமலாக்கத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இந்நிலையில், அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரியா
பாலியல் தொல்லை : ராஜேஷ் தாஸ் வழக்கின் தீர்ப்பு விவரம்!
ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை!