“பாதிக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி அல்ல… வேலைக்கு நகை விற்று பணம் கொடுத்தவர்கள் தான்” : மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பு வாசித்து கொண்டிருக்கிறார்.

“கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்டவர் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும்,  அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ததற்கு முன்னோடி குற்றமாக கருதப்படும், போக்குவரத்து கழக வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்தவர்களை பறறி இங்கே ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. ஒரு எழுத்து கூட எழுதப்படவில்லை. இதை நான் இங்கே மிக வேதனையோடு சுட்டிக்காட்டியாக வேண்டும்.

அவர்களின் துயரங்களை இந்த நீதிமன்றம் மறக்கவில்லை.  ஒருவேளை அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் சமரசமாக விரும்பி சென்றிருந்தால் கூட அவர்கள் தங்கள் வீட்டு பெண்களின் வளையல்களை விற்று அல்லது வீட்டையே அடமானம் வைத்து பணம் கொடுத்திருப்பார்கள் என்பதை மறந்துவிட முடியாது” என்று தனது தீர்ப்பில் சொல்லி வருகிறார் நீதிபதி கார்த்திகேயன்.

பாதிக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி என்ற அடிப்படையிலேயே இந்த வழக்கு இதுவரை நடந்து வந்த நிலையில் நீதிபதி கார்த்திகேயனின் இந்த பார்வை திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts