பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணையின் போது கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்து வருகிறார்.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, “அமலாக்கத்துறை காவல்துறை அதிகாரிகள் அல்ல. அமலாக்கத்துறை அதிகாரிகள் அப்படி கருதப்பட்டால் போலீஸ் அதிகாரியின் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும். இது பிஎம்எல்ஏ சட்ட விதிகளுக்கு முரணானது. கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல்துறையில் ஆஜர்படுத்த மட்டுமே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணையின் போது கைது செய்ய அதிகாரமில்லை. பெரோ வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் காவல் எடுத்து விசாரிப்பதில்லை. பிஎம்எல்ஏ வழக்கில் போலீஸ் காவலை நாடுகின்றனர். அது தான் பிரச்சனையாக உள்ளது” என்று வாதம் செய்து வருகிறார்.
செல்வம்
“என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” – அண்ணாமலை
IND vs WI: வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்தியா… சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ்
தொழில் நுட்பம், வேளாண்மை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்