அமலாக்கத் துறை, போலீசா?: துஷார் மேத்தாவின் முரண்பாடு -கபில் சிபல் வாதம்!

அரசியல்

செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் இன்று (ஜூலை 14) ஆஜராகி வாதாடி வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் கடந்த ஜூன் 11, 12ஆம் தேதிகளில் விசாரணை நடத்தினார்.

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத் துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினர்.

துஷார் மேத்தா வாதத்துக்கு பதிலளிக்க வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரியது.

அதன்படி வழக்கை ஜூலை 14ஆம் தேதிக்கு நீதிபதி கார்த்திகேயன் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 14) காலை 10.30 மணிக்கு செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடி வருகிறார்.

“அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்தவும் பறிமுதல் செய்யவும் அதன் மீது விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் தான் அதிகாரம் உள்ளது.

இது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. கைது செய்யப்பட்ட பின்பு குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அமலாக்கத் துறையால் முடியாது. ஏனென்றால் அமலாக்கத் துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதாடி வருகிறார்.

அமலாக்கத் துறைக்கு காவல் துறையினரின் அதிகாரம் இல்லை என்று இதே துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்திருக்கிறார். ஆனால் அதிகாரம் இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் துஷார் மேத்தா முரணான வாதத்தை முன்வைத்துள்ளார் என்று கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரியா

அவதூறு வழக்கு… இரண்டு தலைமுறைக்கு இடையே நடக்கும் யுத்தம்: அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0