அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூலை 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 12) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை பிடியில் இருக்கிறார். எனினும் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதால் காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.
முதலில் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 28வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கடந்த ஜூன் 14ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் ஜூன் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜூலை 12 வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து வரும் ஜூலை 26ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.
பிரியா
பாஜக: மூன்று மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள்!
அறிமுகம் கொடுத்த தயாரிப்பாளர் மரணம்: ராதிகா, பாரதிராஜா கண்ணீர்!