சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை 10 மணியளவில் நிறைவுபெற்றது. தற்போது அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்தது குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “ அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை முதுநிலை மருத்துவ ஆலோசகரும் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் மற்றும் அவரது குழுவினரால் பைபாஸ் (Beating Heart Coronary Artery Bypass Surgery) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டுள்ளது
அவர் தற்போது ஹீமோடைனமிக் நிலையில் (இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சீராக இருத்தல்) உள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கார்டியோடோராசிக் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!
தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!