அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று (நவம்பர் 20) விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
தனக்கு ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அக்டோபர் 19-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை நிராகரித்தார். மேலும், “மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோர முடியாது. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் தலைமறைவாக இருப்பதால் சாட்சியங்களை கலைக்க கூடும்” என்று நீதிபது தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்தநிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கிச்சன் கீர்த்தனா: ஷக்கர்கந்தி (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) சாட்