சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (செப்டம்பர் 8) ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை முதன்மை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி அல்லி, வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் ஜாமீன் மனுவையும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி முறையிட்ட போது நீதிபதி ரவி, “இந்த வழக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வருவதால் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. உயர்நீதிமன்றம் ஒருவேளை ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே தன்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியும்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் மூல வழக்கு மற்றும் ஜாமீன் வழக்கு இரண்டையும் முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அருண் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த முறையீட்டை நீதிபதி அல்லி ஏற்றுக் கொண்டு மனுவாகத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மோனிஷா
”மாரிமுத்து ஜாலியான மனிதர்… இதை ஏத்துக்கவே முடியல”: எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் வேதம்
`எதிர்நீச்சல்’ மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள்… நடந்தது என்ன?