காஞ்சிபுரம் மாவட்டம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும், திமுக பவள விழா பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று (செப்டம்பர் 28) நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அவரை நிகழ்ச்சி திடலுக்கு பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி, கையைப்பிடித்துக்கொண்டு அழைத்து வந்தார். மேடைக்கு முன்னாள் போடப்பட்டிருந்த முதல் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் செந்தில் பாலாஜி வந்ததும் எழுந்து நின்று நலம் விசாரித்தனர்.
471 நாட்களுக்கு பின்பு கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி சிறையில் இருந்து செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை செந்தில் பாலாஜி நேற்று (செப்டம்பர் 27) சந்தித்தார். சிறைவாசத்திற்கு பிறகு செந்தில் பாலாஜி கலந்து கொள்ளும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், திமுக தொண்டர்கள் மற்றும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை… அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!
ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னை வந்தது எப்படி? – நாமக்கல் எஸ்.பி விளக்கம்!