Senthil Balaji at Stanley Hospital

ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி : என்ன ஆச்சு?

அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (நவம்பர் 15) ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் 21ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஜூலை மத்தியில் காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி 10ஆவது முறையாக நவம்பர் 20ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வரும் நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்தச்சூழலில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் செந்தில் பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார்.  ஆம்புலன்ஸில் இருந்து இறங்கியதும் வீல் சேரில் மருத்துவரை சந்திக்க அழைத்து செல்லப்பட்டார்.

கடந்த 3 நாட்களாகச் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாகவும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், அதுதொடர்பாகவும் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: நீதிபதி விலகல்!

300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 36 பேர் பலி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *