மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இன்றைய நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்து வந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி மற்றும் எம்.பி., டி.ஆர் பாலு, சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியைச் சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் மற்றும் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் சென்று வந்தனர்.
வெளியே வந்த முதல்வரிடம் செய்தியாளர்கள் பேச முயன்ற போது, ‘ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு சென்றார்.
பிரியா