சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற திஷா கமிட்டி குழு கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். sengottaiyan attend meeting stalin
மத்திய அரசு திட்டங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கும் ஊரக வளச்சித்துறையின் திஷா கமிட்டி ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
இந்த கூட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை, என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கடந்த வாரம் கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவை, செங்கோட்டையன் புறக்கணித்ததில் இருந்து அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இந்தசூழலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. sengottaiyan attend meeting stalin