அதிமுக தோல்விக்கு சில துரோகிகளே காரணம் : செங்கோட்டையன் போட்ட அடுத்த குண்டு!

Published On:

| By christopher

sengottaiyan ask indentify traitor

அதிமுக கடந்த முறை தோல்வியை தழுவ சில துரோகிகளே காரணம் என்றும், அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். sengottaiyan ask indentify traitor

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழாவில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

பின்னர் அவர் விழா அழைப்பிதழிலும், பேனரிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்பதால் பங்கேற்கவில்லை என்றும் கூறினார்.

ஆனால் கட்சியில் சீனியர் என்றபோதும், தான் ஓரங்கட்டுப்படுவதை சுட்டிக்காட்டவே செங்கோட்டையன் இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார் என்றும், அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது என்றும் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தனது சொந்த தொகுதியான கோபியில் நடந்த கட்சி விழாவில், “எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள். நான் தெளிவாக உள்ளேன்” என கூறியிருந்தார்.

துரோகிகள் அடையாளம் காணப்பட வேண்டும்! sengottaiyan ask indentify traitor

தொடர்ந்து, ஈரோட்டில் இன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், “தலைவர் தந்த வழியிலேயே நாம் அனைவரும் பயணித்தோம். வீறுநடைபோட்டோம். இங்கே நீங்கள் இவ்வளவு பேர் இருக்கின்றீர்கள் என்றால், இந்த இயக்கத்திற்காக, இந்த இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக.. இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யக்கூடிய தொண்டர்கள் எந்த இயக்கத்திலும் இல்லை. இது அதிமுகவில் மட்டும் தான் இருக்கிறது.

இதனை எதற்காக சொல்கிறேன் என்றால், இயக்கத்தை பொறுத்தவரை இந்த முறை மட்டும் தான் நாம் தோல்வியை தழுவியுள்ளோம். அதற்கு சில துரோகிகள் தான் காரணம். இதனை எதற்காக சொல்கிறேன் என்றால், அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share