இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கும் போது, ஏன் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்? என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இன்று (அக்டோபர் 29) அக்கட்சியின் சென்னை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதற்குப் பின் பத்திரிகையாளர்களைத் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்தார்.
அப்போது, நாளை(அக்டோபர் 30) ராமநாதபுரம் பசும்பொன்னில் நடக்கவிருக்கும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தவுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தனியார் மையமாக்க உள்ளதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று சொன்ன அவர், “எந்த காரணத்திற்காகவும் அரசு மருத்துவமனைகள் தனியார் மையமாக்கக் கூடாது. எவ்வளவு பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும், அரசு மருத்துவமனைகள் தனியார் மையமாகுவதை ஒருபோதும் தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதிக்கக் கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.
அவரிடம், “கூட்டணிக் கட்சியான உங்களது கட்சிக்கு ஆட்சியதிகாரத்தில் பங்குக்கொடுப்பதில் எதாவது பிரச்சினை இருக்குமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு “அதனை டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் முடிவு செய்யும். எங்களது கட்சி தேசியக் கட்சியாகும், மாநிலக் கட்சிக் கிடையாது, தனியாக முடிவு செய்வதற்கு” என்று பதிலளித்தார்.
காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் சரவணன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கடிதம் எழுதியதை நாங்கள் கண்டித்திருக்கிறோம், அது அவரது தனிப்பட்ட கருத்து, கட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் செல்வப்பெருந்தகை.
இதே மாதிரி திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி ஆட்சியதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திமுகவிற்குக் கடிதம் எழுதியிருந்தே என்பதற்கு, மாநிலக் கட்சிகள் அப்படிப் பதிலளிக்கலாம், ஆனால் தேசிய கட்சியான காங்கிரஸ் அப்படிச் செய்யமுடியாது என்றார்.
மேலும் வருங்காலத்தில் விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்பதற்கு, ” இந்தியா கூட்டணி ஏற்கனவே வலுவாகத்தான் இருக்கிறது. அதனால் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று செல்வப்பெருந்தகை பதிலளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மகாராஷ்டிரா தேர்தல்: கடைசி நாள் நாமினேஷன் … வேட்பாளர்களை இறுதி செய்வதில் குழப்பம்!
கொடுக்குறது 70 ஓவா… இதுக்கு டாய்லெட் இப்படிதான் இருக்கும்!- அமெரிக்க பெண்ணுக்கு இந்தியர்கள் பதிலடி!
விஜய்யுடன் கூட்டணியா? – எடப்பாடி பதில்!