காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவி: இளங்கோவன் பதில்!

Published On:

| By Monisha

evks elangovan meets kamalhassan

காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக செல்வபெருந்தகை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகப் போட்டியிட்டார் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் 66 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (மார்ச் 10) காலை தலைமைச் செயலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பதவியேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவனிடம், ‘மூத்த உறுப்பினரான நீங்கள் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவராக பதவியேற்க வாய்ப்புள்ளதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இளங்கோவன், “காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக ஏற்கனவே செல்வபெருந்தகை இருக்கிறார். வயதில் சிறியவராக இருந்தாலும் அவரை பொறுத்தவரை, மதச்சார்பற்ற தன்மைகளில், ஜாதி மதங்களை ஒழிக்க வேண்டும் என்ற நிலையிலே உறுதியாக இருக்கக்கூடியவர்.

அவருடைய செயல்பாடு என்பது 20 மாதங்களுக்கு மேலாக நல்லபடியாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அவரே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். எனக்கு காங்கிரஸ் சட்டமன்ற தலைவராவதில் விருப்பம் இல்லை” என்று பேசினார்.

இதனையடுத்து பதவியேற்ற பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மோனிஷா

போலி வீடியோக்களை தோலுரித்த ஜுபைருக்கு கொலை மிரட்டல்!

ஆன்லைன் தடை சட்ட மசோதா: ஆளுநருக்கு அப்பாவு கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel