தலித் இளைஞர்கள் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்: செல்வபெருந்தகை கண்டனம்!

அரசியல்

தலித் சமூக இளைஞர்கள் வாயில் சிறுநீர் கழித்த கொடூர சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (நவம்பர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தலித் சமூக இளைஞர்கள் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

சாதி ஆதிக்க மனப்பான்மையில் இந்த கொடூரச்செயலை செய்த மனித மிருகங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போதும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

விளிம்புநிலை மக்களை ஒரு மனித உயிரினமாக மதிக்காத சமூகத்தில்தான் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் இதுபோன்ற அநாகரீக சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தேசிய பாதுகாப்புச்சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஐபிசி சட்டபிரிவுகள் 294 மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

மேலும், மாவட்டம் முழுவதிலும் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை அதிகளவில் நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க, மனித சமூகத்தில் வாழத் தகுதியற்ற வன்கொடுமைக் குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

காயம் அடைந்துள்ள இளைஞர்களுக்கு மருத்துவ வசதிகளும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’எந்த கடவுளும் கறி சாப்டா தப்புன்னு சொல்லல’: நயனின் அன்னபூரணி ட்ரெய்லர்!

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் தொடர்பா?: அதானி குழுமம் விளக்கம்!

+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *