மதவாத சக்திகளை ஒழிக்க வேண்டும் என்றால் தவெக தலைவர் விஜய் இந்தியா கூட்டணிக்கு வந்தால்தான் முடியும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் 86-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (18.1.2025) ராஜா அண்ணாமலைபுரம், ராஜிவ் பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம், விஜய் குறித்து காங்கிரஸ் அதிகம் பேசி வருகிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “ விஜய் அவருடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்று உரையாற்றினார். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டிவிடலாம்.
ஆனால் மதவாத சக்திகளை, இந்துத்துவா சக்திகளை அகற்ற வேண்டும் வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது அவருடைய இயக்கத்துக்கும், அவருடைய கொள்கை கோட்பாட்டுக்கும் நல்லது. இதை நான் எதார்த்தமாக, இந்திய பிரஜையாக சொல்கிறேன்” என்று அழைப்பு விடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
“வழக்கறிஞர்கள் இல்லாமல் இதெல்லாம் முடியாது” : திமுகவின் சட்டத்துறை மாநாட்டில் கே.என்.நேரு பேச்சு!