Sellur Raju who cursed ops

ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் : செல்லூர் ராஜூ சாபம்!

அரசியல்

”இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை செருப்புக்கு சமம் என பேசிய அண்ணாமலை ஒரு கூமுட்டையாக தான் எனக்கு தெரிகிறார்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை நடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து  தாராப்பட்டி, துவரிமான் பகுதிகளில் செல்லூர் ராஜு இன்று (மார்ச் 31) தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “நான் முதன்முதலில் எனது மேற்கு தொகுதியான தாராபட்டி பகுதியில் தான் பிரச்சாரத்தை தொடங்கி 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன். ராசியான ஊர் அது.

அங்கிருந்து தான் தற்போது டாக்டர் சரவணனுக்கு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். கண்டிப்பாக அவர் வெற்றி பெறுவார்” என்றார்.

அண்ணாமலைக்கு உறுதுணையாக..!" - நள்ளிரவு தாண்டி நீடித்த பேச்சுவார்த்தைக்குப்பின் டிடிவி தினகரன் | ttv dinakaran announce an alliance with the BJP in the 2024 parliamentary ...

அண்ணாமலை கூமுட்டை!

மேலும் அவர், “இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை செருப்புக்கு சமம் என பேசிய அண்ணாமலை எனக்கு ஒரு கூமுட்டையாக தான் தெரிகிறார்.

இந்தி படித்தவர்கள் அதிகம் பேர் ஏன் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்துள்ளனர் என்பதும், தமிழும், ஆங்கிலமும் படித்த தமிழர்கள் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் வேலை பார்க்கிறார்கள் என்று அண்ணாமலைக்கு தெரிய வேண்டாமா?

டி.டி.வி தினகரனை வளர்த்துவிட்டவர் ஜெயலலிதா தான். அப்படிப்பட்ட ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி, அவரது மனைவிக்கு நிகராக பேசிய அண்ணாமலைக்கு பின்னால் நிற்கிறார் என்றால் டிடிவி தினகரனுக்கு மானம், ரோசம் இருக்கிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டி - மற்ற 4 ஓபிஎஸ் பெற்ற சின்னங்கள் என்ன? - Ex CM OPS allotted Jackfruit ...

ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் எதுக்கு தெரியுமா?

தொடர்ந்து, “ஓபிஎஸ்க்கு அவருக்கு பிடித்த பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது என்ன ஆக போகுதுன்னு இனி தான் தெரியும்.

டீக்கடையில் டீ ஆத்துபவரை முதல்வராக பதவி கொடுத்து அழகு பார்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் அதிமுக, இரட்டை இலை சின்னத்தை அழிக்க நினைத்தார். அதனால் தற்போது அவர் இருக்கிற இடம் தெரியாமல் போயுள்ளார். இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு எதிராக வேலை பார்ப்பவர்கள் அனைவரும் காணாமல் போவார்கள்” என செல்லூர் ராஜூ எச்சரித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமலிங்கம்

வடசென்னையில் காற்று மாசுபாடு வாரியம் அமைக்கப்படும் : கலாநிதி வீராசாமி வாக்குறுதி!

SRHvsGT : மொஹித் பவுலிங்கில் சுருண்ட ஹைதராபாத்… ஈஸியாக வென்ற குஜராத்!

 

+1
0
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *