நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் திமுக போராட்டம் நடத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஆகஸ்ட் 17) தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இந்தநிலையில் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் திமுக போராட்டம் நடத்த வேண்டும் என்று செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக மதுரை மாநாடு விளம்பர அனுமதி கேட்டு மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் கே.ராஜு “அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் திமுக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக அறிவித்தது தரக்குறைவான செயலாகும். நீட் தேர்வை ரத்து செய்ய தமிழகத்தில் போராட்டம் நடத்துவது எந்தவகையிலும் பயன்தராது.
திமுக நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் போராட்டம் நடத்த வேண்டும். திமுகவால் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மக்களின் நம்பிக்கையை பெற முடியாது, மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். திமுகவின் நாடகத்தை நம்ப மாட்டார்கள்” என கூறினார்.
நேரு அருங்காட்சியகம் பெயர் மாற்றம்: ராகுல் பதிலடி!
செங்கல்பட்டு: லோகோ பைலட்டை தாக்கிய நபர் கைது!