பாட்னாவில் நேற்று (ஜூன் 23) நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவிற்கு எதிராக பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, திரிணமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகள் கலந்து கொண்டன.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பாஜகவும் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று (ஜூன் 24) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்த கூட்டம் நடைபெற்று ஒரு பிரயோஜனமும் இல்லையே. ஒரு அமைப்பையோ தலைவரையோ உருவாக்கவில்லையே.
பல மாதங்களாக பேசப்பட்டு நடத்திய கூட்டத்தில் யார் தலைவர் என்றே முடிவெடுக்கவில்லை. ஒற்றுமையே இல்லாத ஒரு கூட்டணியாக அது இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் திமுக தலைவர்கள் எல்லாம் முதல்வர் ஸ்டாலின் தான் பிரதமர் என்கின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இதே போன்று ஒரு கூட்டத்தில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று சொன்னார்கள். அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் தற்போது கூட்டணியில் இருக்கிறார்.
ஆனால் முதல்வரின் திருவாய் மலரவில்லையே. அப்படியென்றால் ராகுல் காந்தியை பிடிக்கவில்லையா. அப்படியில்லையென்றால் காங்கிரஸ் மீது சந்தேகம் வலுத்திருக்கிறதா?… காங்கிரஸிற்கும் திமுகவிற்கும் உரசல் ஏற்பட்டிருக்கிறதா?” என்று பேசினார்.
முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா “எதிர்க்கட்சிகளின் போட்டோ செஷன்” என்று விமர்சித்திருந்தார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, பாஜக எம்.பி.சுஷில் மோடி உள்ளிட்டோரும் விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
வளர்ப்பு நாய்களுடன் விளையாடிய தோனி
மேல் வரி குறைப்பு: குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவிப்பு!