சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (டிசம்பர் 6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட, ஓய்வுபெற்ற நீதீயரசர் சந்துரு பெற்றுக்கொள்கிறார்.
கட்சி தொடங்கி விஜய் பங்கு பெறும் முதல் பொதுநிகழ்ச்சி என்பதால், அவரை காண இன்று மதியம் முதலே, கிண்டி – போரூர் சாலையில் கூட்டம் அலை மோதியது.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு மாலை 6 மணியளவில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முதலில் வருகை தந்தனர்.

அவர்களை தொடர்ந்து விஜய் அரங்கிற்கு வருகை தந்தார். அவருக்கு பறை, மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட, அதை ஏற்றுக்கொண்ட அவரும் சிறிது நேரம் பறையிசை கலைஞர்களுடன் பறையடித்து மகிழ்ந்தார்.
பின்னர் அங்கிருந்த கட்சி தொண்டர்களின் கைதட்டல் அதிர அரங்கிற்குள் நுழைந்தார்.
விழா நடைபெறும் இடத்தில் அமைப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை அருகே செல்பி புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏதுவாக, ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து விஜய், ஆதவ் அர்ஜூனா என பலரும் புகைப்படம் எடுத்தனர்.
அதன்பின்னர் தொடங்கிய நிகழ்ச்சியில், முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனை பாடிய சிறுமி, பாடி முடித்ததும், நேராக ஓடிவந்து விஜய்யுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும், புத்தகம் வெளியிடும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன?
வரலாற்றை சுட்டிக் காட்டிய பிசிசிஐ : ஐசிசி கூட்டத்தில் வாலை சுருட்டிய பாகிஸ்தான்