“200 அல்ல, 234 தொகுதிகளிலும் வெல்வோம்” – விஜய்யை சாடிய சேகர்பாபு

அரசியல்

சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று (டிசம்பர் 6) நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “இறுமாப்போடு 200 வெல்வோம் என்று சொல்பவர்களை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் 200 அல்ல, 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “திமுக அரசின் நலத்திட்டங்களால் அனைத்து தரப்பட்ட மக்களும் சுபிட்சமாக இருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த பெருமழைக்குப் பிறகு கொளத்தூருக்கு ஸ்டாலின் வந்தபோது, மக்களின் பாராட்டு மழையில் தான் அவர் நனைந்து சென்றார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற திமுகவின் கனவு வீணாகும் என்று அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராமல் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் 200 அல்ல, 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

திமுக மீது எப்போதெல்லாம் இதுபோன்ற அவதூறுகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் 80 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிற திமுக தொண்டர்கள், 100 கி.மீ வேகத்தில் பயணிப்பார்கள். 2026-ஆம் ஆண்டு மீண்டும் ஸ்டாலினை முதல்வராக அரியணையில் ஏற்றும் வரை எங்களது வேகமும் பயணமும் குறையாது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓபிஎஸ்- கே.பி.முனுசாமி: இடையே நடப்பது என்ன?

Arun Vijay ‘மிஷன் சேப்டர் 1’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0