முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவையடுத்து நள்ளிரவில் நேரில் சென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95). இவர் முதுமையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி இரவு உயிரிழந்தார்.
அவரது இறுதிச்சடங்குகள் நேற்று மாலை பெரியகுளத்தில் செய்யப்பட்டு மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
பழனியம்மாளின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்திலும், பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியிலும் தொடர்புகொண்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன், சசிகலா, அன்புமணி ராமதாஸ், சீமான், ரா.முத்தரசன், வைகோ, ராமதாஸ், ஜி.கே.வாசன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி பெரியகுளம் புறப்பட்டார்.
நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு வந்த சீமான், சோகத்துடன் காட்சியளித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் பணி!
லட்சுமி மேனனின் புதிய பட அப்டேட்!
புது கதையை ஏதாவது கிளப்பி விட போறாப்புல..பள்ளியில் ஒன்றாக படித்தது மாதிரி ஏதும்..சூதானம்.