பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் போலியானது என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதற்கு சீமான் பதில் அளிக்க முடியாமல் சென்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகரனுடன் சீமான் நிற்கும் புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தார்.
இதனையடுத்து பலரும் சமூகவலைதளங்களில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து வருகின்றனர்.
எனினும் இதுதொடர்பாக சீமான் எந்தவித விளக்கமும், பதிலும் அளிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் விழுப்புரத்தில் இன்று நடந்த கள் விடுதலை மாநாட்டில் சீமான் கலந்துகொண்டார்.
பின்னர் மேடையை விட்டு இறங்கிய சீமானிடம், பிராபகரன் புகைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ’அத விடுங்க’ என்று மழுப்பியபடி பதில் தெரிவித்துள்ளார்.